அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது ...என்றும் அன்புடன்...
நா.கோபி கண்ணன் ....

ஒரு வானம்… மூன்று சூரியன்கள்!

நமது பூமியில் இருந்து 149 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் `எச்.டி. 188753′ என்ற நட்சத்திரத்தை வியாழன் போன்ற ஒரு ராட்சத வாயுக்கோள கிரகம் மிக நெருக்கமாக மூன்றரை நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இந்தக் கிரகம் சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தைக் காட்டிலும் இருபது மடங்கு குறைவான தூரத்தில் அதன் நட்சத்திரத்தை வலம் வந்துகொண்டிருக் கிறது.இந்தக் கிரகம் வலம் வந்துகொண்டிருக்கும் மைய நட்சத்திரத்தை, வேறு ஒரு ஜோடி நட்சத்திரங்கள் சுற்றுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால், அந்த இரு நட்சத்திரங்களும் ஒன்றையொன்று 156 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இந்த இரட்டை நட்சத்திரங்கள், சூரியனை சனி- யுரேனஸ் கிரகங்கள் சுற்றிவரும் தொலைவில் அந்த மைய நட்சத்திரத்தை 25.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுகின்றன. இந்தக் கிரக அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் `விண்வெளி சர்க்கஸ்’ என்று அழைக்கின்றனர்.மேலும், இந்த மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறு நிறமாக இருக்கின்றன. பிரதான நட்சத்திரம் மஞ்சள் நிறத்திலும், தொலைவில் வலம் வந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்திலும் இருக்கின்றன. எனவே இந்த வாயுக்கோள கிரகத்தின் சந்திரனில் இருந்து பார்ப்போருக்கு வானில் அதிசயக் காட்சியாக மூன்று சூரியன்கள் தெரியும். மேலும் மூன்று சூரியன் களும் மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என்று வெவ்வேறு நிறங்களில் இருப்பதால் வானம் வர்ணஜாலமாகக் காட்சிஅளிக்கும். தினமும் மூன்றுமுறை சூரிய உதயங்களும், அஸ்தமனங்களும் நிகழும். அதைப் போல வெப்பமும் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

குணங்கள்

நவரெத்தினங்களின் குணங்கள்
முத்து _ நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும். மரகதம் _ கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றர்ல குதிரை தும்மும். பச்சைக்கல் _ குத்து விளக்கு முன்பு (ஒளியின்) காண்பித்தால் சிவப்பு நிறமாக தோன்றும். வைரம் _ சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது. பவளம்: உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும். கோமேதகம் _ பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும். புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும் வைடூரியம் _ பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும். நீலக்கல் _ பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

மாணிக்க வாசகர்

சுந்தரமூர்த்தி

திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையர், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் வடிவில் அங்குவந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அதை வாங்கிப்படித்த சுந்தரர் ,”இது பொய் என் பாட்டனார் எழுதிகொடுத்தது செல்லாது உனக்கென்ன பித்தா ? என்ன உளருகிறாய் என அந்த ஓலையை கசக்கிக் போட்டார் இனி உன்னிடம் ஆதாரம் இல்லை போ “;என்றார் உடனே முதியவர்,” நான் கொண்டுவந்தது படி ஓலை அசல் அங்கு வைத்திருக்கிறேன் இவன் இந்த படி ஓலையை நறுக்கிப் போட்டப்பவே தெரிந்திருக்கலாம்உண்மையை மறைக்கிறான் என்று ஆகவே இந்த அடிமையை என்னை கேட்காமல் திருமணம் செய்யக்கூடாது “; என்றார் அங்கிருந்தவர்களும்,” ஆமாம் முதியவர் சொல்வதில் ஞாயம் உள்ளது” என்றனர்.சரி பித்துப்பிடித்தவனே எங்கே மூலப் படி என சுந்தரமூர்த்தி கேட்க அதை நான் அங்கு வைத்திருக்கிறேன் வா என்னுடன் என, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிபர் திடீரென மறைந்தாராம். அசரீரியாக தன்னைப்பற்றிப் பாட சொல்ல என்னபாடுவது என கேட்க தன்னைப் பித்தனே என்று சொன்னாயே அதையே பாடு என்றாராம் சுந்தரர், “பித்தா பிறை சூடி” என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். “நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

மாணிக்கவாசகர்

இறைவனை வழுத்தும் நூல்களில் பக்தனின் ஆன்மீக அனுபவத்தைச் சொற்களாகப் பிழிந்தெடுத்து, கசிந்துருகிப் பேசுபவை உலகில் மிகமிகச்சில நூல்களே உள்ளன. அவ்வாறு காணப்படும் சில நூல்களில் ஒன்றென இடம்பெறும் சிறப்புபெற்றது, திருவாசகம்.
இதைப்பாடியவர் மாணிக்கவாசகர். அவரை மணிவாசகர் என்றும் அழைப்பர். இப்பெயர் இவருக்கு இறைவனால் இடப்பட்டதாகும்.

வரலாறு

இவர் வாழ்ந்த நாடு பாண்டியநாடு. சொந்த ஊர், மதுரையின் வடகிழக்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் இருக்கும் “தென்பறம்புநாட்டுத் திருவாதவூர்”. சம்புபாதாசிருதர், சிவஞானவதி என்பவர்களின் புதல்வர். இவருடைய பெயர் திருவாதவூரார். இதுதான் இவருடைய இயற்பெயரா அல்லது சொந்த ஊரை ஒட்டி ஏற்பட்ட காரணப்பெயரா என்பது தெரியவில்லை.

காலம்

இவருடைய காலத்தைக்கூட அறுதியாகக்கூற இயலவில்லை. அறுபத்துமுன்று நாயன்மார்களின் வரிசையில் இவர் இல்லை. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் இவர் பாடப்பெறவில்லை. ஆகவே எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகிய சுந்தரருக்குக் காலத்தால் பிற்பட்டவராக இருக்கலாம். நம்பியாண்டார் நம்பியால் வகுக்கப் பட்ட திருமுறை வரிசையில் இவரது நூல்கள் இடம்பெறுகின்றன. ஆகவே பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த நம்பியின் காலத்துக்கும் முற்பட்டவர். அரிகேசரி அல்லது அரிமர்த்தனன் என்னும் பாண்டியமன்னனின் காலத்தவர்.

பாண்டிய அமைச்சர்

இவர் இளமையிலேயே ஒரு மாபெரும் மேதையாகத் திகழ்ந்தவர். ஆகவே மதுரைப் பாண்டிய மன்னன், இவரை அழைத்துவந்து தன்னுடைய மந்திரியாக வைத்டுக் கொண்டான். தென்னவன் பிரமராயன் என்னும் உயரிய விருதொன்றைத்தந்து பெருமைப் படுத்தினான்.

ஆன்மீக நாட்டம்

அரசனுக்குக் அமைச்சராக இருந்தாலும் அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். தக்கதொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது.

குதிரைக் கொள்முதல்

ஒரு நாள், தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர். அவர்கள் செய்த வாணிபத்தில் அரபு, பாரசீகக் குதிரைகள் முதன்மை பெற்றன.

ஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த “திருப்பெருந்துறை” என்னும் ஊரை அடைந்தார். அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, “சிவ சிவ” என்ற ஒலி கேட்டது. ஒலியை நோக்கிச் சென்றார்.

தடுத்தாட்கொள்ளல்

அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு “மாணிக்கவாசகன்” என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோயிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் செலவிட்டு விட்டார்.

குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லி யனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.

நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்

மாணிக்கவாசகரின் வருத்தத்தைத் தீர்ப்பதற்காக சொக்கேசப் பெருமான், காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் “சொக்கராவுத்தரெ”ன்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரைவணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின.

மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். வைகையில் வெள்ளம்: பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடல்
அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அவ்வமயம் பிட்டுவாணிச்சியான வந்தியின் கூலியாளாகத் தானே வந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டு, அந்த அடி எல்லாவுயிர்களின் மேலும் விழுமாறு வழங்கி, தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப் போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.

சைவத்தொண்டு

மணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் “சிவபுராணம்”, “திருச்சதகம்” முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரைபுரிந்து திருவண்ணாமலையில் “திருவெம்பாவை”, “திருவம்மானை” ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார்.

அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமை மகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச் செய்த விடைகளே, “திருச்சாழல்” என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் “அச்சோப்பதிகம்” போன்ற சிலவற்றைப்பாடினார்.

பாவையும் கோவையும்

ஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவறை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், “பாவை பாடிய வாயால், கோவை பாடுக!”, என்று கேட்டுக் கொண்டான்.

ஈசன் எழுதிய ஏடு

மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், “இவை திருச்சிற்றம் பலமுடையான் எழுத்து”, என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான்.

வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர்.
அவனே அதற்கு அர்த்தம்

மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, “அந்நூலின் பொருள் இவனே!”, என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் கலந்து, கரைந்து, மறைந்தார்

எலுமிச்சம் பழம்

* எலுமிச்சம் பழச் சாறு தண்ணீரில் கலந்து தயாரிக்கப்படும் பானம் தாகத்தை தணிக்க மிகச்சிறந்த மலிவான பானம். இது புத்துணர்வு ஊட்டுகிறது ஈரலை சுத்தப் படுத்துகிறது.
* வைட்டமின் C நிறைந்தது.
* கோடை வெப்பத்தாலும் உடல் நலக் குறைவாலும் ஏற்படும் நீரிழப்பை ஈடு கட்ட எலுமிச்சை ஜூஸ் நல்லது. வயிற்றுப் போக்கால் உடலில் உள்ள நீரும் தாதுக்களும் குறையும் போது,நிறைய தண்ணீரில் எலுமிச்சப் பழச் சாறும் சிறிது உப்பும்,ஒரு சிட்டிகை சோடா உப்பும் கலந்து அருந்துவது நீர் தாது இழப்பை ஈடு கட்டும்.
* எலுமிச்சம் பழம் பண்டைய காலத்தில் காயங்களை ஆற்றவும், பல்வேறு விஷ முறிவாகவும் பயன் பட்டது.
* சாதாரணமாக ஒரு எலுமிச்சம் பழத்தில் மூன்று மேஜைக்கரண்டி சாறு இருக்கும். இதனை சாறு பிழிவதற்கு முன் சில வினாடி மைக்ரோ வேவ் அவனில் வைத்து எடுத்து சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
* எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலச்சத்து மீன் உணவிலிருந்து வாடையை வெளிப்படும் amines களை ஆவியாகாத ammonium உப்புக்களாக மாற்றி விடுகிறது.எனவே மீன் உணவுகளின் வாடையை போக்குவதற்கு எலுமிச்சை சாறு நல்லது.
* சமைப்பதற்கு முன் மாமிசத்தில் எலுமிச்சை சாறு தடவுவது மாமிசத்தை மென்மையாக ஆக்கும்.
* கிரீஸ்,மற்றும் கறைகளை நீக்குகிறது.
* கிருமிகளை ஒழித்து துர்நாற்றத்தை போக்குகிறது.
* எலுமிச்சைத் தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய் இயற்க்கையான பூச்சிக்கொல்லியாகப் பயன் படுகிறது.
* முடியை செம்பட்டை யாக்க உதவுகிறது.முடி கொட்டுவதை தடுக்கும்
* சருமத்தை வெளுப்பாக்கவும் உதவுவதாக நம்பப் படுகிறது.
* எலுமிச்சை சற்றில் pH அளவு குறைவாக இருப்பதால் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல் படுகிறது.
* எலுமிச்சைச் சாறு முகப்பருவுக்கு மருந்தாகப் பயன் படுகிறது. முகத்திற்கு புத்துணர்வு ஊட்டும். அதோடு சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி் சிறிது நேரம் களித்து முகம் கழுவி வர தோல்சுருக்கம் , கரும்புள்ளிகள், நீங்கி முகம் பளபளக்கும்.
* எலுமிச்சையின் நறுமணம் புத்துணர்வு தருகிறது.
* எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி உப்பு அல்லது,சோடாப் பொடியில் முக்கி செம்புப் பாத்திரங்களைத் தேய்த்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.
* எலுமிச்சையில் உள்ள மெக்னீசியச்சத்து கால்சியத்துடன் சேர்ந்து இரத்ததில் ஆல்புமினை உருவாக்கப் பயன் படுகிறது.
* எலுமிச்சையிலுள்ள அனேகத் தாதுப்பொருட்கள் பித்த வாந்தி,இருமல்,ஈரல் கோளாறு, போன்ற நோய்களை குணமாக்க உதவுகிறது.
* தொண்டை வலிக்கு எலுமிச்சை சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து அடிக்கடி வாய்க் கொப்பளிக்க குணமாகும்.
* நகச்சுற்று , பருக்கள் போன்றவற்றில் எலுமிச்சம் பழத்தை வெட்டி க் கட்டி வைத்தால் சீழ் வெளியேறும் வலி குறையும்
* அரை கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது நெஞ்செரிச்சலைக் குறைக்கிறது.வயிற்றுப் பொருமல், போன்ற ஜீரணக் கோளாறுகளைப் போக்குகிறது. வயிற்றுப் புண்ணைக் நீக்கும்
* அதிக மாத விடாய்,மற்றும் இரத்தப்போக்கிற்கு எலுமிச்சை சாறு தண்ணீர் கலந்து அருந்தி வர நிற்கும்.பேதி, சீதபேதி, இரத்தபேதி, இரத்தப் போக்கு ஏற்பட்டால் காய்ச்சிய நூறு மில்லி பாலில் பாதி எலுமிச்சம் பழச் சாறு கலந்து, வடிகட்டியபாலை மட்டும் குடிக்கவும். நோய் விரைவில் கட்டுப்படும்
* ஒவ்வொரு இரண்டு முதல் நான்கு மணிக்கொருமுறை எலுமிச்சை சாறு தண்ணீர் கலந்து அருந்த scurvy நோய் குணமாகும்.
* தூக்கமின்மையை நீக்கும்.
* அஜீரண வாந்திக்கும், கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை சாறு நல்லது.
* மயக்கத்தை நீக்கும், பித்தத்தைத் தணிக்கும்.
* மூல நோய், மற்றும் வயிற்றுக் கடுப்பைப் போக்கும்.
* புதிதாகப் பிழிந்த எலுமிச்சை சாற்றை இளநீரில் கலந்து கொடுத்துவர டைபாய்டு காய்ச்சலில் குணம் தெரிவதுடன் வாந்தி உணர்ச்சியும் குறையும்.
* இரண்டு துளி எலுமிச்சை சாற்றை காலை மாலை காதில் விட்டு வந்தால் காது குடைச்சல் தீரும்.
* எலுமிச்சைச் சாற்றுடன் சர்க்கரை கலந்து தினமும் சாப்பிட்டு வர, மஞ்சள் காமாலை, கட்டுப்படும்.
* கண் நோய்கள் நீக்கும்.
* நூறு மில்லி நீரில் பாதி எலுமிச்சை சாறும் சிறிதளவுஉப்பு சேர்த்து குடிக்க காம உணர்வு குறையும்.
* எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிப் பழச்சாறு, தேன் கலந்து தினசரி ஒருவேளை வீதம் தொடர்ந்துகுடிக்க காசம் கட்டுப்படும்.
* உடல் எரிச்சல் தோல் வறட்சி உள்ளவர்கள் குளிக்கும் நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறை சேர்த்து குளித்தால் நலமாகும்.
* உணவில் தவறாமல் எலுமிச்சைச் சாறு, வல்லாரைக் கீரை அல்லது மஞ்சள் கரிசலாங் கண்ணி ஆகிய வற்றை சேர்த்துக்கொள்வது வெண் புள்ளிகளை குணமாகும்.
* மூத்திரப் பிரச்சினையய் சரியாக்கும்
* நீரிழிவைத் தணிக்கும்.
* வாய் நாற்றம் நீங்கும்.பல் ஆட்டம் நிற்கும்.
* தூக்க ஸ்கலிதத்தை நீக்கும்.
* எலுமிச்சை சாறும் ,தேனும் சம பங்கு எடுத்து இருமல் மருந்தாக உபயோகிக்கலாம்.

பாதக அம்சம்:

* அளவுக்கு அதிகம் அருந்துவது பல் எனாமலை தேய்க்கும்.
* அதிக காய்ச்சலின் போது அருந்த நிலமை மோசமாகும்.
* மருந்துண்ணும் நாளில் மருந்தின் சக்தியை குறைக்கும்.
* சிறு குழந்தைகளுக்கு ஆகாது.
* ஆஸ்துமாவிற்கு ஒத்துக்கொள்வதில்லை.
* வாத நோய்க்கும் சளிக்கும் ஆகாது.
* மாத விலக்கு நாட்களில் குளிரும் காய்ச்சலும் உண்டாக்கும்.
* விந்து உறுதியை தளர்த்தும்

எலுமிச்சையிலுள்ள சத்துக்கள்:
நீர் --- 48.6 gm
புரதம் --- 1.5 gm
கொழுப்பு --- 1.0 gm
தாது உப்புக்கள் ---- 0.7 gm
நார் சத்து ---- 1.3 gm
சர்க்கரை ---- 10.9 gm
சக்தி ---- 59K Cal
சுண்ணாம்பு ---- 90 mg
பாஸ்பரஸ் ---- 20 mg
இரும்பு ---- 0.3 mg
மாவு --- 15 Ug
தையமின் --- 0.02 mg
ரிபோஃப்லெவின்-- 0.03 mg
நியாசின் ---- 0.1 mg
வைட்டமின் C --- 63mg

லெமன் ஜூஸ் செய்முறை:

* இரண்டு எலுமிச்சம் பழங்களை எடுத்து நன்றாக சாறு பிழியவும்.
* நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
* இரண்டு மேஜை கரண்டி சர்க்கரை ,கால் தேக்கரண்டி உப்பும் நன்கு கலக்கவும்.
* தேவைப்பட்டால் ஃப்ரிஜ்ஜில் வைத்து அல்லது ஐஸ் கட்டி போட்டு பருகவும்.

எலுமிச்சைத் தேன் ஜூஸ்:

* பாதி எலுமிச்சம் பழத்தை ஒரு கப் வெது வெதுப்பான நீரில் பிழிந்து,ஒரு தேக்கரண்டி தேன் விட்டு கலக்கி அருந்தவும்.

இஞ்சி லெமனேட்:

* அரை அவுன்ஸ் தெளிந்த இஞ்சி சாற்றில் பாதி எலுமிச்சையை பிழிந்து விட்டு சிறிது உப்பு சேர்த்து அருந்தவும்.

லெமன் சோடா:

* ஒரு எலுமிசம் பழத்தின் சாறெடுத்து அதில் 3 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைசியில் ஒரு சிட்டிகை சோடாப்பொடி போட்டு கலக்கிக் குடிக்கவும்.கடும் வயிற்று வலி பிரச்சனைகள் உடனே தீரும்.

மாமிசம் மனித உணவு அல்ல!

மாமிசம் மனித உணவு அல்ல!
முட்டை, மீன், இறைச்சி, புழு முதலானவையும் மாமிசம் ஆகும்.)

தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!
மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.

மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால், மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால், மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.

தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. “ஹார்ஸ் பவர்”என்று கூறுகிறோம். அந்த “ஹார்ஸ்” குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!

இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?

தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?
தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?

தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.

தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.

இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.

பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.

ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை, சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.

சத்தமாக பாட்டு கேட்டால் ஆபத்து

வாஷிங்டன் : இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு காது செவிடாவதற்கு ஐபாட், எம்பி3 பிளேயர்களில் அதிக சத்தமாக பாட்டு கேட்பதே முக்கிய காரணம் என்று ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 1998 மற்றும் 2004ம் ஆண்டுக்கு இடையே ஒரு ஆய்வும், 2005 முதல் 2008ம் ஆண்டில் மற்றொரு ஆய்வும் நடந்தது.அதன் விவரம் வருமாறு:முதல் ஆய்வின்படி, இளைஞர்களிடம் காது கேளாமைக்கு அதிகமான ஒலி இறைச்சல்கள், அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர்களில் பாடல்கள் கேட்பது போன்றவை காரணம் என்று அறியப்பட்டது.2005ம் ஆண்டின் போது செய்த ஆய்வில் ஐபாட், எம்பி3 பிளேயர்களில் தொடர்ந்து பல மணி நேரம் அதிக சத்தமாக பாடல்கள் கேட்கும் பழக்கத்தால் 5ல் ஒருவருக்கு காது கேட்கும் திறன் குறைவதாக தெரிய வந்தது.

இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள்

இதய நலம் பற்றிப் பேசும் போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

நமது உடல் நலமும், மனநலமும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவின் தன்மை மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை அமைந்துள்ளது. எனவேதான் ஆங்கிலத்தில் You are what you eat என்று சொல்வார்கள். அதாவது நீ சாப்பிடும் உணவின் தன்மைத்தான் நீ யார் என்று தீர்மானிக்கிறது என்று பொருள்.

நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைச் சர்க்கரைப் பொருள்கள் புரதம், கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புகள் என பலவகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இனி விளக்கமாகப் பார்க்கலாம்.

கொழுப்புச் சத்து

கொழுப்புச் சத்து என்பது நீரில் கரையும் இயல்புடையது. அதே சமயம் ஆல்கஹால், ஈதல் போன்றவற்றிலும் கரையக் கூடியது.
கொழுப்புச் சத்துகள்தான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. எனவேதான் கொழுப்புச் சத்தை ஆற்றலின் பெட்டகம் (Store house of energy) என்று சொல்கிறார்கள். ஒரு கிராம் கொழுப்புச் சத்தானது 9 கலோரிகள் வெப்ப ஆற்றலைத் தருகிறது.

நமது ஒரு நாளைக்கான கொழுப்புச் சத்து தேவையானது நம் வயது, உடல் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தினசரி ஒரு தனி மனிதனுக்கான மொத்தக் கலோரிகள் தேவையில் 10 முதல் 15 சதவீதம், கொழுப்புச் சத்துகளில் இருந்து கிடைக்க வேண்டும். தனி மனிதனின் அன்றாட உணவில் கொலஸ்ட்ராலின் அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாகக் கொழுப்புப் பொருள்களை நம் அன்றாட உணவில் சேர்ப்பதால் நமது இதயம் பாதிக்கப்படுவது பற்றியும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாவது பற்றியும் ஏற்கெனவே பார்த்தோம். ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவங்கள் சேர்வதன் மூலமாக மூளைக்குப் போகும் ரத்தத்தின் அளவு குறைந்து ஸ்ட்ரோக் (Stroke) போன்ற ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

கொழுப்பு வகை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது மூன்று அம்சங்களைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த வகையான கொழுப்பு முதலில் தேவைதானா என்பதை யோசிக்க வேண்டும். நாம் சாப்பிடப்போகும் கொழுப்பின் தன்மையைப் பார்க்க வேண்டும். இறுதியாகக நாம் சாப்பிடப் போகும் கொழுப்பின் அளவை கவனிக்க வேண்டும்.

தினசரி உணவில் கொழுப்பு வகை உணவுகளைச் சேர்க்கும்போது, செறிவற்ற கொழுப்பையும், செறிவுற்ற கொழுப்பையும் 2: 1 பங்கு என்ற விகிதத்தில் பயன்படுத்துவது நல்லது.

அன்றாட உணவில் செறிவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், வனஸ்பதி, பாமாயில், முட்டை மஞ்சள் கரு, பால், பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது உங்கள் இதய நலனைப் பாதிக்காத வகையில் மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.

வனஸ்பதி

தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் அணுக்களைச் செயற்கையாகச் செலுத்தி, அவற்றைச் செயற்கையாக உறையவைத்து உருவாக்கப்படும் கெட்டியான எண்ணெய் வகைதான் வனஸ்பதி. இவ்வாறு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் Trans fat எனப்படும். நம் நாட்டில் இதன் விலை குறைவாக இருப்பதால் சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் வனஸ்பதியை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

அண்மையில், வனஸ்பதிக்கும், இதய நோய்க்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்த உணவியல் வல்லுநர்களும், இதய மருத்துவர்களும், செறிவுற்ற கொழுப்பைவிட மிக அதிக அளவில் இதயத் தமனிகளைச் சிதைக்கும் ஆற்றல் வனஸ்பதிக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர்.
எனவே உலகெங்கும் வனஸ்பதியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்க ஒரு இயக்கத்தையே தொடங்கியுள்ளார்கள். இதய நலத்தைக் காக்க விரும்புபவர்களும், ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களும், அன்றாட உணவில் டிரான்ஸ் கொழுப்பு வகையில் வருகிற வனஸ்பதியைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது இதயத்தக்கு நல்லது.

அன்பு உள்ளங்களே!!!
நாளுக்கு நாள் எதிர்பாராத விதத்தில் வளர்ந்து கொண்டு போகும் இணையத்தில் எத்தனையோ தமிழ் பக்கங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆகையால் இவற்றில் ஒரு சிலவற்றையாவது இணையத்தில் புதிதாகச்சேரும் நண்பர்கள் சுலபமாக கண்டுபிடித்து அவற்றினால் நன்மையடைவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பக்கத்தை உருவாக்கியுள்ளேன்.நீங்கள் இந்தப் பக்கத்தை முழுமையாக தமிழில் பார்ப்பதற்கு இந்த தமிழ் எழுத்து தேவை.நன்றி வணக்கம்


Well, with this site i do an attempt to create links between existing best Tamil sites and other useful informations in the Net. With the growing number of informations in the Net, it is not possible to filter out all Tamil sites. Anyhow i would try to give my best links to all my friends and crawlers who are interested in Tamil Links and Int. News links and much more useful Links time to time . Thank You.